ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஜெய்ஸ்வால் அபார சதம் காரணமாக இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து, 271 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 39.5 ஓவர்களில் 271 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 116 ரன்களும், ரோஹித் சர்மா 75 ரன்களும், விராட் கோலி 65 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம், 2-1 என்ற கணக்கில் இந்தியா ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டெஸ்ட் தொடரை இழந்த இந்தியாவுக்கு, ஒருநாள் போட்டி தொடரை வென்றது பெரும் ஆறுதலாக அமைந்தது.
Edited by Siva