1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. KKR tops the point table with hattrick victory

ஹாட்ரிக் வெற்றியால் புள்ளிப் பட்டியலில் உச்சத்துக்கு சென்ற கே கே ஆர்!

IPL 2024
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது அணியாக சாதனை படைத்தது. இந்த இன்னிங்ஸில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை குவித்துள்ளது.

அதிகபட்சமாக சுனில் நரேன் 39 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். கொல்கத்தா அணியின் சிக்ஸர் நாயகன் ஆண்ட்ரே ரஸல் 19 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் எட்டே பந்துகளில் 26 ரன்களை குவித்தார்.

இதையடுத்து 273 ரன்கள் என்ற இலக்கோடு ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது கே கே ஆர். டெல்லி அணி சார்பாக ரிஷப் பண்ட் 25 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். இந்த ஹாட்ரிக் வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குட் நியூஸ்… கம்பேக் கொடுக்கும் சூர்யகுமார் யாதவ்.. தோல்வியில் இருந்து மீட்பாரா?