திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (11:40 IST)

கோலியின் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த கம்பீர்!

நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்ட நிலையில் ஆர்சிபி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 200 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் ஆடிய ஆர் சி பி 16 ஓவரிலேயே இலக்கை எட்டியது. அந்த அணியின் வில் ஜாக்ஸ் அபாரமாக ஆடி 41 பந்துகளில் சதமடித்தார். அவருக்கு உறுதுணையாக கோலி 44 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். போட்டி முடிந்ததும் பேசிய கோலி ” பலரும் எனது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிராக எனது பேட்டிங் குறித்து பேசி வருகிறார்கள். எனக்கு அணியை வெற்றி பெற வைப்பதே முக்கியம். அதனால்தான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அணியில் நான் இருக்கிறேன்.நாங்கள் இப்போது சுயமரியாதைக்காவும் ரசிகர்களுக்காவும் விளையாடுகிறோம். முதல் பாதியில் விளையாடியது போல இனிமேல் விளையாடமாட்டோம்.இதை தொடர விரும்புகிறோம்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கோலி மீதான இந்த விமர்சனம் குறித்து பேசியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் கம்பீர் “கடைசியில் எல்லாமே உங்கள் அணி வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதைப் பொறுத்ததே.  உங்கள் அணி வெற்றி பெற்றால் அவர்கள் எதைப் பற்றியும் பேசமாட்டார்கள். ஆனால் உங்கள் அணி தோற்றுவிட்டால் தோல்விக்கான அனைத்துக் காரணங்களையும் விட்டுவிட்டு அதை மட்டும்தான் விமர்சிப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.