பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் அடுத்த ஆண்டும் வழக்கம் போல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உறுதி அளித்துள்ளார்.
கடந்த ஜூன் 4-ஆம் தேதி ஆர்.சி.பி.யின் வெற்றி பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததன் காரணமாக, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் இங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலுக்கு பின் பேசிய டி.கே. சிவக்குமார், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாது என்று உறுதியளித்தார். மேலும், சின்னசாமி மைதானத்தை விட்டு கிரிக்கெட் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் இல்லை என்றும், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் முறையாகப் பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் வருங்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மிக பெரிய மைதானம் ஒன்று கட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Edited by Mahendran