திங்கள், 17 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 மார்ச் 2025 (16:53 IST)

விசில்போடு vs பல்தான்ஸ்: சென்னை சேப்பாக்கத்தில் CSKvMI மோதல்! - டிக்கெட் விற்பனைக்கு கட்டுப்பாடு!

CSK vs MI

ஐபிஎல் போட்டிகளில் Great Rivalry ஆன சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை விவரம் வெளியாகியுள்ளது.

 

22ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் முதல் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் Great Rivalry போட்டியாக கருதப்படும் இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

 

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் 19ம் தேதி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி காலை 10.15 மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்கும் இந்த டிக்கெட் விற்பனையில் ஒரு நபர் அதிகபட்சமாக 2 டிக்கெட் மட்டுமே வாங்க முடியும் என கூறப்பட்டுள்ளது. டிக்கெட் விலை ரூ.1700 தொடங்கி ரூ.7000 வரை உள்ள நிலையில் டிக்கெட்டுகளை வாங்க இப்போதே பல ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K