1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mohamed kaif report about KKR team menace

நல்ல ப்ளேயரை அந்த டீம் விளையாட விடாது!? – முகமது கைஃப் கருத்து!

IPL
ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் குல்தீப் யாதவ்விற்கு முந்தைய அணி வாய்ப்புகளை வழங்கவில்லை என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனில் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில் 6 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்தது. டெல்லி அணி வீரர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

ஆனால் கடந்த காலங்களில் குல்தீப் யாதவ்விற்கு சரியான வாய்ப்புகள் வழங்கபடவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “குல்தீப் ஒரு மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்து விட்டார். தினேஷ் கார்த்தி, இயான் மோர்கன் போன்றவர்கள் கேப்டனாக இருந்தபோது கூட குல்தீப்பிற்கு கொல்கத்தா அணியில் சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவரை வீட்டிலேயே உட்கார வைத்து விட்டார்கள். இப்படி நடத்தினார் எந்த மேட்ச் வின்னருமே நெருக்கடிக்கு ஆளாவார்கள்” என தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தோனி படைக்க இருக்கும் புதிய சாதனை! – தீவிர எதிர்பார்ப்பில் சிஎஸ்கே போட்டி!