திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (21:34 IST)

கே கே ஆர் பேட்ஸ்மேன்களை திணறடித்த ஆர் சி பி பவுலர்கள்… கலக்கிய ஹசரங்கா!

ஆர் சி பி மற்றும் கே கே ஆர் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த கே கே ஆர் 128 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில்  கொல்கத்தா அணிக்கு எதிரான ஹைதராபாத்  அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டு பிளஸ்சி   முதலில் பவுலிங்க்  தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய கே கே ஆர் அணி  வீரர்கள் ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறினர். பெங்களூர் அணியின் வனிந்து ஹசரங்கா மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசினர். இதனால் கே கே ஆர் 18.5 ஓவர்கள் முடிவில் 128 ரன்கள் மட்டுமே சேர்த்தது.