திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 31 மார்ச் 2022 (10:31 IST)

கூலா விளையாடுறதல அவர் தோனி மாதிரி…. டூ பிளஸ்சி பாராட்டிய RCB வீரர்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த முறை RCB அணிக்காக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக்.

நேற்று நடந்த போட்டியில் இக்கட்டான நிலையில் களமிறங்கிய ஆர் சி பி அணியை வெற்றிப் பெற வைத்தார் தினேஷ் கார்த்திக். இந்த போட்டி மட்டுமில்லாமல் கடந்த போட்டியிலும் கடைசி நேர அதிரடிக் காட்ட தனது திறமையை நிரூபித்தார்.

இந்நிலையில் போட்டிக்குப் பின்னர் பேசிய ஆர் சி பி கேப்டன் பாஃப் டு பிளஸ்சி ‘ நெருக்கடியான நிலையில் கூலாக விளையாடுவதில் தோனியை போன்றவர் தினேஷ் கார்த்திக். அணியில் நல்ல வீரர்கள் உள்ளனர். அவர்களை நான் சார்ந்திருக்கிறேன்’ எனக் கூறிப் புகழ்ந்துள்ளார்.