புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (09:13 IST)

புதிய எல்.எஸ்.ஜி அணியை வீழ்த்துமா சிஎஸ்கே? – இன்று மோதல்!

ஐபிஎல்லில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய அணியான லக்னோவை எதிர்கொள்ள உள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜியன்ர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

இரு அணிகளும் இந்த சீசனில் முன்னதாக ஒரு போட்டியில் மட்டும் விளையாடியுள்ள நிலையில் இரு அணிகளுமே தோல்வியை தழுவின. தரவரிசையில் தற்போது சிஎஸ்கே 8வது இடத்திலும், எல்எஸ்ஜி 7வது இடத்திலும் உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் முதல் வெற்றியை பெறுவது யார் என்பதில் இரு அணிகளிடையே பல பரீட்சை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா சறுக்கல்களை சந்தித்தாலும் அவற்றை படிப்பினையாக கொண்டு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்எஸ்ஜி கேப்டன் கே.எல்.ராகுல் ஏற்கனவே கேப்டன் பதவி வகித்த அனுபவம் உள்ளவர் என்பதால் சிஎஸ்கேவுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.