1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. K L Rahul step down for LSG team captaincy

கேப்டன் பதவி வேண்டவே வேண்டாம்… லக்னோ அணியிலேயே தொடரும் கே எல் ராகுல்? பின்னணி என்ன?

RCB New Captain
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தன. அதில் லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் போட்டி முடிந்ததும் மிகவும் அநாகரிகமாகவும், ஆவேசமாகவும் பேசியதும் ஒன்று. இந்த வீடியோ வைரலாக ரசிகர்கள் “ஒரு அணித் தலைவரை உரிமையாளர் இப்படி எல்லாம் அவமானப்படுத்தக் கூடாது” எனக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்  கே எல் ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி வேறொரு அணியில் இணையப் போகிறார் என்ற கருத்துகள் எழுந்தன. ஆனால் இப்போது திடீரென கே எல் ராகுல் சஞ்சீவ் கோயங்காவை சந்தித்துப் பேசியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ராகுல் மீண்டும் லக்னோ அணிக்காகவே விளையாட முடிவு செய்திருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால் இந்த சந்திப்பில் தனக்குக் கேப்டன் பதவி வேண்டாம் என்றும் தான் அணியில் ஒரு வீரராக மட்டும் விளையாட விரும்புவதாகவும் ராகுல் சஞ்சீவ் கோயங்காவிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதை அவரும் ஏற்றுக்கொண்டதாகவும் அணிக்கு நிக்கோலஸ் பூரன் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சிஎஸ்கேவை விட்டு விலகி அந்த அணிக்காக ஆட விரும்புகிறாரா ஜடேஜா?