தொடர்புடைய செய்திகள்
- ஆர் சி பி அணியை அன் பாலோ செய்த மேக்ஸ்வெல்… அப்போ உண்மைதானா?
- ஆர் சி பி அணிக்குப் புதுரத்தம் பாய்ச்சப்போகும் நிர்வாகம்.. இவங்கள்லாம் லிஸ்ட்ல இருக்காங்களா?
- அடுத்த ஆண்டில் ஆர்சிபிக்கு கப் உறுதி? கேப்டனாகும் கே.எல்.ராகுல்! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
- மனசுல எதுவும் வச்சுக்காதீங்க.. கே.எல்.ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ அணி உரிமையாளர்..!
- கே.எல்.ராகுலை திட்டி செங்கோட்டையில கொடி ஏத்திட்டீங்களா? – LSG உரிமையாளரை கிழித்தெடுத்த முகமது ஷமி!
லக்னோ அணி உரிமையாளரோடு திடீர் சந்திப்பு… கே எல் ராகுல் எடுத்த முடிவு என்ன?
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது 10 அணிகள் விளையாடும் இந்த போட்டிகளில் இதுவரை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றிருக்கின்றன.
இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தன. அதில் லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் போட்டி முடிந்ததும் மிகவும் அநாகரிகமாகவும், ஆவேசமாகவும் பேசியதும் ஒன்று. இந்த வீடியோ வைரலாக ரசிகர்கள் “ஒரு அணித் தலைவரை உரிமையாளர் இப்படி எல்லாம் அவமானப்படுத்தக் கூடாது” எனக் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கே எல் ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி வேறொரு அணியில் இணையப் போகிறார் என்ற கருத்துகள் எழுந்தன. ஆனால் இப்போது திடீரென கே எல் ராகுல் சஞ்சீவ் கோயங்காவை சந்தித்துப் பேசியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ராகுல் மீண்டும் லக்னோ அணிக்காகவே விளையாட முடிவு செய்திருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.