வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (08:01 IST)

ஆர் சி பி அணியை அன் பாலோ செய்த மேக்ஸ்வெல்… அப்போ உண்மைதானா?

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது 10 அணிகள் விளையாடும் இந்த போட்டிகளில் இதுவரை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றிருக்கின்றன. ஆனால் விராட் கோலி இடம்பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த அணி அடுத்த சீசனில் பல புது வீரர்களோடு களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் முதல் கட்டமாக லக்னோ அணிக்குக் கேப்டனாக இருக்கும் கே எல் ராகுலை ஆர் சி பி அணிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக கடந்த சில சீசன்களாக தொடர்ந்து சொதப்பி வரும் க்ளன் மேக்ஸ்வெல்லை அணியை விட்டு ஓரம்கட்ட முடிவு செய்திருப்பதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளன. அதையடுத்து மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர் சி பி அணியை அன்பாலோ செய்துள்ளார். இதன் மூலம் அந்த தகவல் உண்மைதான் என்பது ஊர்ஜிதம் ஆகிறது.