1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:36 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது இடத்தை உறுதி செய்யவேண்டும்… சூர்யகுமார் ஆசை!

உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி 20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் தற்போது உள்ளூர் தொடர்களில் கவனம் செலுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் டெஸ்ட் ஃபார்மட்டில் தன்னுடைய இடத்தை உறுதி செய்ய ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “இந்திய அணியில் தற்போது இளம் வீரர்கள் கஷ்டப்பட்டு வந்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு முன்பே நான் அறிமுகமாகி இருந்தாலும் காயம் காரணமாக என்னால் அணியில் தொடர முடியவில்லை. இனிமேல் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன்.பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.