தொடர்புடைய செய்திகள்
- அடுத்த ஆண்டில் ஆர்சிபிக்கு கப் உறுதி? கேப்டனாகும் கே.எல்.ராகுல்! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
- மனசுல எதுவும் வச்சுக்காதீங்க.. கே.எல்.ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ அணி உரிமையாளர்..!
- கே.எல்.ராகுலை திட்டி செங்கோட்டையில கொடி ஏத்திட்டீங்களா? – LSG உரிமையாளரை கிழித்தெடுத்த முகமது ஷமி!
- கே.எல்.ராகுலின் கேப்டன் பதவி நீக்கம்? எங்க டீம்க்கு வாங்க! – ஆர்சிபி ரசிகர்கள் அழைப்பு!
- IPL- 2024: கேப்டன்களில் அதிகம் சம்பளம் வாங்குபர் யார்?
ஆர் சி பி அணிக்குப் புதுரத்தம் பாய்ச்சப்போகும் நிர்வாகம்.. இவங்கள்லாம் லிஸ்ட்ல இருக்காங்களா?
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது 10 அணிகள் விளையாடும் இந்த போட்டிகளில் இதுவரை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றிருக்கின்றன. ஆனால் விராட் கோலி இடம்பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் அந்த அணி அடுத்த சீசனில் பல புது வீரர்களோடு களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் முதல் கட்டமாக லக்னோ அணிக்குக் கேப்டனாக இருக்கும் கே எல் ராகுலை ஆர் சி பி அணிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் ராகுல் மட்டுமில்லாமல், ஜோஸ் பட்லர் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரைக் கூட ஏலத்தின் மூலமாகவோ அல்லது அதற்கு முந்தைய ட்ரான்ஸ்பர் மூலமாகவோ ஆர் சி பி அணிக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.