திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2023 (22:48 IST)

உன் வெளிச்சத்தில், எப்படி நேசிப்பது என்பதை நான் கற்றுக்கொள்கிறேன்- கே.எல்.ராகுல் டுவீட்

kl ragul- aditi shetty
இந்திய கிரிக்கெட் அணியின்  நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல்- அதியா ஷெட்டியின் திருமணம் இன்று  கோலாகலமாக நடந்தது.

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னணி வீரர் கே.எல்.ராகுல்.

இவர், பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகன் அதியா ஷெட்டியை காதலித்து வந்த  நிலையில், இவ்ர்களின் திருமணம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று  23 ஆம் தேதி  கே.எல். ராகுலுக்கும் அதிதி ஷெட்டிக்கும் மகாராஷ்டிர மாநிலம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அருகிலுள்ள கண்டாலாவில் சுனில் ஷெட்டிக்குச் சொந்தமான பங்களாவில் வைத்து திருமணம் நடந்தது.

இத்திருமணத்தில் உறவினர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில்,தன் திருமணம் குறித்து கே.எல்.ராகுல் தன் டுவிட்டர் பக்கத்தில், உன் வெளிச்சத்தில்  நேசிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டேன். இன்று எங்கள் உறவினர்களுடன்  நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டேன். அது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களின் ஆசீர்வாதத்தைத் தேடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்