1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 டிசம்பர் 2025 (17:50 IST)

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், கட்டாக் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது  
 
ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு பிறகு, இந்த டி20 தொடர் மூலம் தென்னாப்பிரிக்கா அணி மீண்டும் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
அணியின் மூத்த வீரர் டேவிட் மில்லர் அணிக்கு திரும்புவது, தென்னாபிரிக்காவுக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்திய அணியை பொறுத்தவரை, பேட்ஸ்மேன் சுப்மன் கில் மற்றும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருவரும் காயத்திலிருந்து மீண்டு, முதல் டி20 போட்டிக்கு தகுதியுடன் உள்ளனர் என்ற தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. 
 
இரு அணிகளும் உலக கோப்பைக்கான தங்கள் உத்திகளை சோதிக்கும் முக்கியமான கட்டமாக இத்தொடர் அமையும். சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி அதே உற்சாகத்துடன் டி20 தொடரை சந்திக்கிறது.
 
Edited by Mahendran