புதன், 10 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்..  பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டி20 என மூன்று ஃபார்மட்டுகளிலும் 100-க்கும் அதிகமாக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பிரபல பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார்.
 
நேற்றைய போட்டியின் மூலம் டி20 போட்டிகளில் 101 விக்கெட்டுகளை எடுத்த அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் 149 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 234 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
 
டி20 கிரிக்கெட் போட்டியை பொருத்தவரை, இந்தியாவில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமை அர்ஷ்தீப் சிங் என்பவருக்கு உள்ள நிலையில், 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார்.
 
Edited by Siva