1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதில் ஹர்திக் பாண்டியா அபாரமாக விளையாடி 59 ரன்கள் எடுத்தார்.
 
இதனை அடுத்து, 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது பந்திலேயே குவின்டன் டி காக் அவுட் ஆக, அதன் பிறகு மலமளவென விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது.
 
12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 74 ரன்கள் மட்டுமே தென்னாப்பிரிக்கா எடுத்தது. இதனால் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சண்டிகர் மைதானத்தில் நாளை நடைபெறும்.
 
Edited by Siva