செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siinoj
Last Modified சனி, 21 ஜனவரி 2023 (15:56 IST)

செல்போனால் நின்ற திருமணம்; காதலனை கைது செய்த போலீஸார்

salem
சேலம் மாவட்டத்தில் லவ் டுடே என்ற திரைப்படத்தைப் போன்று செல்போனை மாற்றிக் கொண்ட காதலர்களால் திருமணம் நின்று, காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்(24). இவர், ஒரு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகப் பதவி வகித்து வருகிறார்.

இவர், செவிலியராகப் பணியாற்றும் ஒரு பெண்ணை காதலித்து வந்த  நிலையில்,இரு வீட்டாரின் ஒப்புதலின் பேரில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

ஆனால், சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்தில் வருவது போல் அரவிந்தும், அவரது காதலியும் செல்போனை பறிமாற்றிக் கொண்டனர்.

இந்த நிலையில், அரவிந்தின் செல்போனில் சிறுமியின் அந்தரங்க வீடியோ இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து, போலீஸில் புகாரளித்தார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அரவிந்தை கைது செய்தனர்.