1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (18:56 IST)

கே.எல்.ராகுல்- அதியா ஷெட்டி திருமணத்தில் ஏ.ஆர். ரகுமான் பாடல்

kl ragul
இந்திய கிரிக்கெட் அணியின்  நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல்- அதியா ஷெட்டியின் திருமணம் இன்று நடந்து வருகிறது.
 

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னணி வீரர் கே.எல்.ராகுல். இவர், பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகன் அதியா ஷெட்டியை காதலித்து, டேட்டிங்கில் இருந்தனர்.

இவர்களின் காதலை கடந்தாண்டு   அதிதியின் தந்தை, நடிகர்  சுனில் ஷெட்டியே உறுதிப்படுத்தினார்.

இன்று  23 ஆம் தேதி  கே.எல். ராகுலுக்கும்  அவரது காதலியும் நடிகையுமான அதியா ஷெட்டிக்கும்  திருமணம் நடந்து வருகிறது.

இத்திருமணம் மகாராஷ்டிர மாநிலம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அருகிலுள்ள கண்டாலாவில் சுனில் ஷெட்டிக்குச் சொந்தமான பங்களாவில் நடந்து வருகிறது.

நேற்றிரவு முதல் தொடங்கிய இத்திருமண நிகழ்ச்சியில்,  ஏ.ஆர்.ரஹ்மானின் ஹம்மா ஹம்மா (பம்பாய்),  ஷாருக்கானின் பதான் பட பாடல்கள் ஒலிக்கப்பட்டு, திருமணத்திற்கு வந்த உறவினர்கள் நடனம் ஆடினர்.

இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இன்று மாலை6:30 மணிக்கு  கே.எல்.ராகுல் – அதிதி திருமணம் நடப்பதாக கூறப்பட்டது.

இத்திருமணத்தில் பாலிவுட்  நட்சத்திரங்கள், இந்திய கிரிக்கெட்  அணி வீரர் இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டி என்பதால், இந்திய கிரிக்கெட் வீரர்கல் இதில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by HT City (@htcity)