செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2023 (15:49 IST)

இபிஎஸ் - ஓபிஎஸ் போல வாழாமல் சுயமரியாதையோட வாழுங்கள்: மணமக்களை வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

Udhayanidhi
சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இபிஎஸ், ஓபிஎஸ் போல் வாழாமல் சுயமரியாதையுடன் வாழுங்கள் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் அறிஞர் அண்ணா கட்டணம் இல்லாத திருமண மாளிகை திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அந்த மண்டபத்தில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருள்களையும் வழங்கினார்
 
இதனை அடுத்து அவர் பேசிய போது இபிஎஸ் ஓபிஎஸ் போல் வாழாதீர்கள்,  சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர் அறிவுரையை கூறினார் 
 
மேலும் கலைஞரும் தமிழும் போல தலைவரும் உழைப்பும் போல வாழுங்கள் என்றும் மணமக்களை அவர் வாழ்த்தினார். இபிஎஸ் ஓபிஎஸ் குறித்து அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva