திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2023 (18:06 IST)

ஹன்சிகாவின் திருமணம் நிகழ்ச்சி விரைவில் ஓடிடியில் ஒளிபரப்பு!

தமிழ் சினிமாவில் ‘எங்கேயும் காதல்’ பட வெற்றிக்குப் பின், வேலாயுதம்,சிங்கம்-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஹன்சிகா வலம் வந்தார்.

கடந்தாண்டு நடிகை  ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்த    நிலையில், மீண்டும் மும்பைக்குச் சென்ற அவர் தொழில்துறையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி,. சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா மணந்து கொண்டார்.

சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த திருமணத்தை டிஸ்னி ஹாட் ஓடிடியில் ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியானது.

வல் ஷாதி என்ற   நிகழ்ச்சியாக நடந்த   ஹன்சிகா – சோஹைல் திருமணம் விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் மட்டுமே ஒளிபரப்பாகும் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.