1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Harry brook felt sorry about his comment on Indian fans

இந்திய ரசிகர்களைப் பற்றி அப்படி பேசியிருக்கக் கூடாது… ஹாரி ப்ரூக் வருத்தம்!

இங்கிலாந்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான பந்துகளை எதிர்கொண்டு 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதிரடியாக விளையாடிய அவர் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் ஐதராபாத் அணியால் 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஆனால் அவர் ஆரம்பத்தில் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. இதனால் சமூகவலைதளங்களில் அவர் இந்திய ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டார். அதையடுத்து அவர் ஒரு போட்டியில் சதமடித்த போது “இந்திய ரசிகர்களின் வாயை அடைத்ததில் மகிழ்ச்சி” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “அப்போது நான் சோஷியல் மீடியாவில் தேவையில்லாத சில விமர்சனங்களை பார்த்தேன். அதனால் அப்படி முட்டாள்தனமாக பேசிவிட்டேன். அந்த சம்பவத்துக்கு பின் சோஷியல் மீடியாவில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டேன். இப்போது சோஷியல் மீடியாவுக்கு என்று அட்மின் வைத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட்டர்!