திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (18:49 IST)

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காணும் பிரதமர் மோடி?

PM Modi
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் நிலையில்  லீக் சுற்றில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் வெளியேறின.

அரையிறுதி   போட்டிகள் நவம்பர் 15ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியில் இந்தியா- நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்று, இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பை -2023 இறுதிப்போட்டி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை பிரதமர் மோடி நேரில் காணவுள்ளதாக தகவல் வெளியாகிறது. அதேபோல் பிரபலங்களும் இப்போட்டியை நேரில் கண்டுகளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.