வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (11:35 IST)

ஐபிஎல் 2024-ல் இருந்து விலகிய பிரபல இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், ஜோ ரூட் உலகக் கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 33 வயதாகும் அவர் சமீபகாலமாக டி 20 கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். அவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை அவர் பதிந்தார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனாலும் அந்த சீசனில் 3 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார்.

இந்நிலையில் இந்த ஆண்டு அவரை தக்க வைக்காமல் இங்கிலாந்து அணி விடுவித்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.