வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2023 (12:41 IST)

இங்கிலாந்து பிரதமர் இல்லத்தில் தீபாவளி விழா: மத்திய அமைச்சர் பங்கேற்பு..!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வீட்டில் நடந்த தீபாவளி விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்ற நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வீட்டில் நடந்த தீபாவளி விழாவில் அவர் கலந்து கொண்டார்.

அவருக்கு பிரதமர் ரிஷி சுனக் தேநீர் விருந்து அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருந்தில் ஜெய்சங்கரின் மனைவி மற்றும் ரிஷி சுனக் மனைவி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் அது மட்டும் இன்றி  இந்திய கிரிக்கெட் விராத் கோஹ்லி கையெழுத்திட்ட பேட்டை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ரிஷி சுனக்கிற்கு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அவர் சிறப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva