1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. CSK fans waiting for dhoni new record

தோனி படைக்க இருக்கும் புதிய சாதனை! – தீவிர எதிர்பார்ப்பில் சிஎஸ்கே போட்டி!

IPL
இன்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி லக்னோ அணியுடன் மோத உள்ள நிலையில் தோனி புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜியன்ர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

இரு அணிகளும் இந்த சீசனில் முன்னதாக ஒரு போட்டியில் மட்டும் விளையாடியுள்ள நிலையில் இரு அணிகளுமே தோல்வியை தழுவின. தரவரிசையில் தற்போது சிஎஸ்கே 8வது இடத்திலும், எல்எஸ்ஜி 7வது இடத்திலும் உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் முதல் வெற்றியை பெறுவது யார் என்பதில் இரு அணிகளிடையே பல பரீட்சை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் தோனி நீண்ட ஆண்டுகள் கழித்து அரைசதம் வீழ்த்தி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஐபிஎல் டி20 போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை தொட தோனிக்கு இன்னும் 15 ரன்களே தேவை. இன்றைய ஆட்டத்தில் 15 ரன்களை தாண்டினால் 7 ஆயிரம் ரன்களை கடந்த 5வது இந்திய வீரராக தோனி சாதனை படைப்பார் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
IPL 2022: ”இந்த” 4 அணிகளும் ப்ளே ஆஃப் செல்லும்… ரெய்னாவின் கணிப்பு!