பேட்டிங் ஆர்டரை மாற்றிய தோனி: ஐபிஎல்-லில் வியூகம் கைக்கொடுக்குமா?
ஐபிஎல் போட்டி இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. தற்போது முதலே ஐபிஎல் போட்டி கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளது. இரண்டு வருட தடைக்கு பிறகு சென்னை அணி மீண்டும் வந்துள்ளதால் அதன் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னை சூப்பர் அணியில் விளையாடும் கேப்டன் தோனி, தன்னுடைய பேட்டிங் ஆர்டரை மாற்றி இருக்கிறார். இந்திய அணியில் தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியாத காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்டிபன் பிளெமிங் சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் அணியில் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறார். சென்னை அணியின் பேட்டிங் ஆர்டரை விட பவுலிங் ஆர்டர் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
போட்டியின் போது 4 வது பேட்ஸ்மேனாக இறங்க இருக்கிறார் தோனி, 3 வது பேட்ஸ்மேனாக எப்போதும் போல ரெய்னா களம் இறங்குவார். தோனிக்கு அடுத்து கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு, ஜடேஜா, பிராவோ களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.
இதனால் ஆட்டத்தின் போது 8 விக்கெட் விழும் வரை சென்னை அணி பேட்டிங்கில் மிகவும் வலுவாக இருக்கும் என்று தெரிகிறது.