விஜய் எதற்காக வீட்டை மாற்றினார் தெரியுமா?

CM| Last Modified புதன், 28 மார்ச் 2018 (15:55 IST)
நீலாங்கரையில் இருந்து பனையூர் வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார் விஜய். 
சென்னை, நீலாங்கரையில் உள்ள வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் இதுவரை வசித்து வந்தார் விஜய். அந்த வீட்டில் தற்போதைய நவீன வசதிகள் எதுவும் பெரிதாக இல்லை. குறிப்பாக, குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் அவர்களுக்குத் தேவையான வசதிகள் இந்த வீட்டில் இல்லையாம். எனவே, அவர்களுக்குத் தேவையான வசதிகளுடன் வீட்டை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்ட விரும்புகிறார்கள்.
இதனால், நீலாங்கரையில் இருந்து பனையூரில் உள்ள வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார் விஜய். அதுமட்டுமல்ல, வழக்கமாக ஸ்விப்ட் காரில் தான் ஷூட்டிங்  ஸ்பாட்டுக்கு வருவார் விஜய். தற்போது அதை மாற்றிவிட்டு இன்னோவா காரில் வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :