பத்ம பூஷண் பெற்ற தோனியை வாழ்த்திய நிவின் பாலி

nivin
CM| Last Updated: செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:18 IST)
நேற்று பத்ம பூஷண் பெற்ற தோனியை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நிவின் பாலி.
 
விடுபட்டவர்களுக்கு நேற்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. கிரிக்கெட் வீரர் தோனிக்கும் நேற்றுதான் வழங்கப்பட்டது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, தோனி விருது வாங்கும்போது அவருடைய மனைவி சாக்‌ஷி பெருமையுடன் பார்க்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
dhoni
 
இந்நிலையில், மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி, தோனியை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “கடந்த 7 வருடத்துக்கு முன்பு இதே நாளில்தான் உலகக்கோப்பையை வென்றார் தோனி. 7 வருடத்துக்குப் பிறகு அவருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது. அவருடைய டி-ஷர்ட் நம்பரான 7 கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது. இந்தியாவின் பெருமை அவர்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நிவின் பாலி.


இதில் மேலும் படிக்கவும் :