உணர்ச்சிவசப்பட்ட தோனிக்கு தண்ணீர் கொடுத்த சுரேஷ் ரெய்னா

c
Last Modified சனி, 31 மார்ச் 2018 (17:20 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல தடைகளை கடந்து திரும்பவும் விளையாடவதை நினைத்து கண் கலங்கியுள்ளார் கேப்டன் தோனி.
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடக்கவுள்ளது. இந்த தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளது.
 
இது தொடர்பாக சென்னையில் நடந்த விழாவில் தோனி பேசியிருப்பதாவது, 8 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தினேன். கடந்த 2 ஆண்டுகளாக  அணிக்கு விளையாட முடியாமல் போனது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மீண்டும் சென்னை ஜெர்சியை அணியும் போது உணர்ச்சிபூர்வமாக இருந்தது என்று கூறி கண் கலங்கினார். கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்து விடுவோம். எதிர்காலத்தை நோக்கி வெற்றியுடன் நடைபோடுவோம். 
 
உங்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. நாங்கள் திரும்ப வந்து விட்டோம், வந்து விட்டோம் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அப்போது சுரேஷ் ரெய்னா, தோனிக்கு தண்ணீர் கொடுத்து அவரை சகஜமாக்கினார்.


இதில் மேலும் படிக்கவும் :