கியாரே செட்டிங்கா? ரஜினியாக மாறிய தல தோனி

Last Modified வியாழன், 29 மார்ச் 2018 (19:21 IST)
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தின் டீசரில் இடம்பெற்ற 'கியாரே செட்டிங்கா' என்ற வசனம் பல மாதங்களாக சமூக வலைத்தளங்களின் டிரெண்டிங் ஆக இருந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் 'காலா' படத்தின் வசனங்களை பேசிய
வீடியோவை காலாவின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனம் தனது டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

காலா வில்லன் நானா படேகர் பேசிய வசனமான 'காலா என்ன பேருய்யா இது' என்ற வசனத்தை சிஎஸ்கே வீர்ர் ஹர்பஜன்சிங்கும், 'காலன் கரிகாலன்' என்ற வசனத்தை பிராவோவும் பேசியுள்ளார். மேலும் பட்டிதொட்டியெங்கும் பரவிய கியாரே செட்டிங்கா என்ற ரஜினியின் வசனத்தை தல தோனியும் பேசிய காட்சிகள். இந்த வீடியோவில் உள்ளது.


சிஎஸ்கே வடிவில் 'காலா' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ


இதில் மேலும் படிக்கவும் :