1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin surpassed harbhajan singh record

ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்த அஸ்வின்!

அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஸ்வின் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் சர்வதேசக் கிரிக்கெட்டில் அவர் 709 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதனால் இந்தியா சார்பாக சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் அனில் கும்ப்ளே 953 விக்கெட்களுடன் முதல் இடத்திலும், ஹர்பஜன் சிங் 707 விக்கெட்களோடு மூன்றாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth