1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (07:37 IST)

அப்பா மகன் விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் படைத்த மற்றொரு சாதனை!

நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதல் நாளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி சார்பாக அஸ்வின் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேஜ்நரைன் சந்தர்பால் விக்கெட்டும் அடக்கம். கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் டேஜ்நரைனின் தந்தையான ஷிவ்நாராயன் சந்தர்பால் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரின் விக்கெட்களையும் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் இணைந்து சாதனைப் படைத்துள்ளார் அஸ்வின்.