1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (08:55 IST)

நேற்றைய போட்டியில் முக்கியமான மைல்கல்லை எட்டிய அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஸ்வின் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இந்த 5 விக்கெட்களின் மூலம் அவர் சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டும் மூன்றாவது இந்திய பவுலர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் அனில் கும்ப்ளே 953 விக்கெட்களுடன் முதல் இடத்திலும், ஹர்பஜன் சிங் 707 விக்கெட்களோடு இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.