திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 15 ஜூலை 2023 (07:40 IST)

டிசம்பரில் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி.. பிசிசிஐ வெளியிட்ட அட்டவணை!

இந்திய அணி இப்போதெல்லாம் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகிறது. இதனால் இந்திய அணி வீரர்களுக்கு பெரியளவில் ஓய்வுகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில் இப்போது உலகக் கோப்பை முடிந்ததும் இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்று மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. அதற்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது.
டி 20 தொடர்
  • டிசம்பர் 10 – டர்பன் மைதானம்
  • டிசம்பர் 12 –குகெபர்ஹா மைதானம்
  • டிசம்பர் 14 – ஜோஹன்னஸ்பர்க் மைதானம்
ஒருநாள் தொடர்
  • டிசம்பர் 17 – ஜோகன்னஸ்பர்க் மைதானம்
  • டிசம்பர் 19- குகெபர்ஹா மைதானம்
  • டிசம்பர் 21 – பார்ல் மைதானம்
டெஸ்ட் தொடர்
  • டிசம்பர் 26- 30 –சென்சூரியன் மைதானம்
  • ஜனவரி 3-7 – கேப்டவுன் மைதானம்