வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (07:36 IST)

வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை திணறடித்த அஸ்வின் & ஜடேஜா கூட்டணி!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.

அதன்படி பேட்டிங் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணியின் சுழல்பந்து கூட்டணியான அஸ்வின் மற்றும் ஜடேஜா பதம் பார்த்தது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் வருவதும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்தியா சார்பாக அஸ்வின் 5 விக்கெட்களும், ஜடேஜா 3 விக்கெட்களும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி விக்கெட் இழக்காமல் 80 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 40 ரன்களோடும் ரோஹித் ஷர்மா 30 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.