1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2023 (09:47 IST)

டிராவிட்டின் அந்த வார்த்தை என்னை மூளைச்சலவை செய்துவிட்டது… அஸ்வின் கருத்து!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஸ்வின் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 702 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசியுள்ள அவர் “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 14 ஆண்டுகள் எப்படி கடந்தது என்றே தெரியாமல் வேகமாக கடந்து சென்று இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

முதன் முதலாக டிராவிட்டை கோச்சாக அணியில் சந்தித்த போது அவர் என்னிடம் ‘கிரிக்கெட் பயணம் என்பது நீ எடுக்கும் விக்கெட்கள் அல்லது ரன்களைப் பற்றியது அல்ல. இதெல்லாம் நம் நினைவில் இருக்காது. ஒரு அணியாக நாம் உருவாக்கிக் கொள்ளும் நினைவுகள்தாம் நம்மிடம் எஞ்சும்’ எனக் கூறினார். இது எவ்வளவு உண்மை. அவரின்  இந்த வார்த்தைகள் என்னை மூளைச் சலவை செய்துவிட்டன” எனக் கூறியுள்ளார்.