தொடர்புடைய செய்திகள்
- புல்வாமா அட்டாக்கில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.110 கோடி கொடுத்த விஞ்ஞானி!
- நோபல் பரிசா ? எனக்கா ? – இம்ரான் கான் விளக்கம் !
- மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்
- அபிநந்தன் பிடிபடவில்லை; மோடிதான் அனுப்பி வைத்தார் – நெட்டிசன்ஸ் ரவுசு !
- உண்மையில் எல்லையில் தாக்குதல் நடந்ததா? மம்தா சர்ச்சை கேள்வி
அடைத்து வளர்த்த சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்
செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞர் ஒருவர் தாம், வீட்டில் அடைத்து வைத்து வளர்த்த ஆண் சிங்கம் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
மைக்கேல் பிராசெக் எனும் அவர் ஓர் ஆண் சிங்கம், ஒரு பெண் சிங்கம் ஆகியவற்றை இனப்பெருக்கம் செய்ய வைக்கும் நோக்கில், தம் வீட்டிலேயே அடைத்து வளர்த்து வந்தார்.
அவரது உடலை மீட்க, அந்த விலங்குகள் இரண்டையும் சுட்டுக் கொன்றுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரே வீட்டில் அந்த விலங்குகளை வளர்க்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அவர் அந்த விலங்குகளை அணுக யாரையும் அனுமதிக்கவில்லை.
விலங்குகள் நலம் தொடர்பான செக் குடியரசின் சட்டங்களின்படி, எந்த விலங்குகளையும் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தக்கூடாது என்பதால், அவை வேறு இடத்துக்கும் மாற்றப்படவில்லை.
அடுத்த கட்டுரையில்