புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (16:35 IST)

மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்

பொள்ளாச்சி  பகுதியில் கல்லூரி மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து  அவர்களை  மிரட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் வந்ததை அடுத்து  பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சில கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தலைமறைவாகியுள்ள குற்றவாளி திருநாவுக்கரசை கைதுசெய்ய வேண்டுமென திமுக உள்ளிட்ட கட்சிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். மேலும் மாதர் சங்கமும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன. 
 
ஆனால் போலீஸாருக்கு சவால் அளிக்கும் விதமாக அன்றாடமும் திருநாவுக்கரசு மொபைல் மூலம் பேசி வருவதாக தகவல் வெளியானது.
 
ஆனால் திருநாவுக்கரசு ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் தான் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. 
 
எனவே திருநாவுக்கரசை கைது செய்ய வேண்டும் என பல அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்ற நிலையில், கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி தொந்தரவு அளிந்ததாக  தற்போது தலைமறைவாகியுள்ள திருநாவுக்கரசர் தான் போலீஸாரிடம் சரணடையப்போவதாக கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன.