உண்மையில் எல்லையில் தாக்குதல் நடந்ததா? மம்தா சர்ச்சை கேள்வி
கடந்த் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 தீவிரவாத முகாம்கள் சுக்குநூறாக அழிந்ததாகவும், 300க்கும் மேற்பட்ட பயங்கர்வாதிகல் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். கொல்கத்தாவில் அவர் பேசியது பின்வருமாறு, பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையா? இல்லையா? ஏனென்றால் சர்வதேச ஊடகத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதில் எது உண்மை என தெளிவுபடுத்தவும்.
புல்வாமா தாக்குதல் நடந்தபோதும் சரி, இந்தியா தரப்பில் அதற்கு பதிலடி தந்தபோதும் சரி, அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் கூட்டவே இல்லை.
அரசியல் மற்றும் தேர்தல் நோக்கத்திற்காக போர் நடத்தக்கூடாது. உரி மற்றும் பதான்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது பதில் தாக்குதல் நடத்தப்படாதது ஏன் எனவும் கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.