செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (10:13 IST)

விடாது கருப்பு: வழக்கம்போல் டிவிட்டரில் டிரெண்டாகும் ’கோபேக் மோடி’

அதிமுக நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வரும் மோடிக்கு எதிராக வழக்கம்போல் டிவிட்டரில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
 
மோடி தமிழகத்திற்கு வருகை தரும் செய்தி வந்தாலே கோபேக் மோடி என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆவது வாடிக்கையாகிவிட்டது. கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வராதது, மேகதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு, ஸ்டெர்லைட் மற்றும் பொருளாதார ரீதியிலான 10 % இடஒதுக்கீடு உள்ளிட்ட பல விவகாரங்களால் அவருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு அதிகமாகிவிட்டது.
 
இந்நிலையில் இன்று அதிமுக நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வரும் மோடிக்கு எதிராக நெட்டிசன்கள் #GoBackModi #GoBackSadistModi ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கியுள்ளனர். இதனை சமாளிக்க பாஜகவினர் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.