தொடர்புடைய செய்திகள்
- ’இந்தியாவின் வளர்ச்சி அல்ல தளர்ச்சிதான் மோடி அரசு ’ : ஸ்டாலின் விளாசல்
- நிலாவுல வட சுட்ட ஆயாவுக்கு ஒன்னும் ப்ராபிளம் இல்லயே? வைரலாகும் மோடி மீம்ஸ்!
- மோடி வைத்த சஸ்பென்ஸ் ரிவீல்ட்! ஒட்டு மொத்த நாட்டுக்கே பெருமை!!!
- முக்கிய செய்தி வெளியிடப்போகிறேன்: மோடியின் ஒத்த டுவீட்: இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு!!
- இந்தியாவின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் தேர்தல் என்றும் திமுக-காங்கிரஸ் - தேசிய செயலர் சஞ்சய் தத்
"மிஷன் சக்தி" சோதனையால் விண்வெளியில் கழிவுகள்: இந்தியாவுக்கு அமெரிக்கா வார்னிங்!
செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்களால் பாதிப்பை உண்டாக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார்.
செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை அறிவித்தார்.
விண்வெளியில் கழிவுப் பொருட்களை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தாழ்வான உயரத்தில் இருக்கும் சுற்றுப்பாதையில் இந்த சோதனையை இந்தியா மேற்கொண்டதாகவும், இந்தியாவின் இச்சோதனையை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் பேட்ரிக் ஷனாஹன் தெரிவித்தார்.
இது போன்ற சோதனைகளால் உருவாகும் கழிவுப்பொருட்கள், பொதுமக்கள் அல்லது ராணுவ செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை பாதிக்கலாம். மேலும், விண்வெளியில் உள்ள மற்ற பொருட்களுடன் மோதலாம்.
இந்தியாவின் சோதனையில் இருந்து உருவான, 250க்கும் மேற்பட்ட கழிவுப்பொருட்களின் பாகங்களை அமெரிக்க ராணுவம் ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. சோதனைக்கு பிறகு, உருவாகும் கழிவுப்பொருட்கள் குறித்து நாசாவும் எச்சரித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்