வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (16:48 IST)

நிலாவுல வட சுட்ட ஆயாவுக்கு ஒன்னும் ப்ராபிளம் இல்லயே? வைரலாகும் மோடி மீம்ஸ்!

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களிடையே உரையாட இருக்கிறேன். முக்கிய விஷயத்தை உங்களிடம் பகிர காத்திருக்கிறேன் என பதிவிட்டிருந்தார். அந்த சஸ்பென்ஸ் இப்போது வெளியாகியுள்ளது.  
 
விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதன்மூலம் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனையான மிஷன் சக்தி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.  
 
விண்வெளி மூலம் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடிகள் நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மூன்று நாடுகள் மட்டுமே இருந்தன. தற்போது, இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது என தெரிவித்தார். 
 
மோடியின் அறிவிப்பு என்றவுடன் பலருக்கு பணமதிப்பிழப்பு, ஏடிஎம் க்யூ என்றெல்லாம் எண்ணங்கள் போகின. ஆனால், அவரது அறிவிப்பு எதிர்பார்த்த அளவிற்கு ஒன்றும் இல்லாததால், இதை வைத்து பல மீம்ஸ் வெளியாகியுள்ளது. அவற்றில் சில இதோ...