வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By c.anandakumar
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (20:54 IST)

இந்தியாவின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் தேர்தல் என்றும் திமுக-காங்கிரஸ் - தேசிய செயலர் சஞ்சய் தத்

கரூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பொறுப்பாளருமான சஞ்சய் தத் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பேட்டியளித்தார். 
அப்போது, வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் என்றும், ஏற்கனவே இருந்த பிரதமர் மோடியினால் தமிழகம் எந்த வித வளர்ச்சியும் அடையவில்லை என்றும், திமுக-காங்கிரஸ் கூட்டணியால் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதி அளிக்க முடியும் என்றார். ஆகவே, தமிழகத்தில் ஸ்டாலினும், மத்தியில் ராகுலும் இணைந்தால் பல்வேறு மாற்றங்கள் நிறைவேறும், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் இந்த பா.ஜ.க ஆட்சியினால் முடங்கி உள்ளதாகவும், இந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியினர் மீது பொதுமக்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளனர்.
 
, கரெப்சன், கரெக்‌ஷன் என்று உணர்ந்துள்ள மக்கள், இந்த நரேந்திர மோடியினால் தமிழகம் எந்த வித முன்னேற்றமும் அடையவில்லை, டெல்லியில் இருந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இ.பி.எஸ் ஐயும், ஒ.பி.எஸ் ஐயும் இயக்குகின்றார். 
 
ஆகவே கரூரில் உள்ள மக்களவை துணை சபாநாயகர் கடந்த முறை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றியுள்ளாரா என்பதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டுமென்றும், அதே நேரத்தில் மு.க.ஸ்டாலின் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டுமென்றார்.
 
40 வரைவு திட்டங்களை தற்போதே அஜெண்டா வடிவில் கரூருக்கு கொண்டு வர இருக்கின்றார். ஆகவே, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி என்று நாளை நமதே 40 ம் நமதே என்றார். விரைவில் ராகுல்காந்தி தமிழக மக்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பேட்டியின் போது., கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.