வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (14:22 IST)

’இந்தியாவின் வளர்ச்சி அல்ல தளர்ச்சிதான் மோடி அரசு ’ : ஸ்டாலின் விளாசல்

வரும் 17 வது மக்களவைத் தொகுதிக்கு அனைத்து கட்சிகளும் துடிப்பான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். வெயில் என்பது வெற்றிக்கு முன் ஒரு பொருட்டாக இல்லை என்பது இதிலிருந்து தெரியும். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பாஜக மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். 
தமிழகத்தில் வரும் பாராளுன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதிநடைபெறுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள வ்ண்டியூரில் நடைபெற்ற பொதுகூட்டத்தில்  கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. செங்கடேசனுக்கு ஆதரவாகப் பேசினார்.
 
தற்போது இந்தியா வளர்ச்சி அடையவில்லை. தளர்ச்சி தான் அடைந்துகொண்டிருக்கிறது. 45 ஆண்டுகளுக்கு தேசம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தின் போது மட்டும் தான் தமிழகத்திற்கு மோடி வந்து செல்கிறார். 
 
மேலும், தமிழர்களின் புகழ் ஒங்க வேண்டும். சு வெங்கடேசன் மதுரையை காப்பாற்றத் துடிக்கின்ற இளைஞர அவரது வெற்றிக்கு நீங்க ஆரதவளிக்க வேண்டும் இவ்வாறு பேசினார்.