ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (18:06 IST)

கரூர் அருகே தேர்தல் புறக்கணிப்பில் கிராம பொதுமக்கள்?

கரூர் அருகே தேர்தல் புறக்கணிப்பில் கிராம பொதுமக்கள் !? சாதி சங்கத்தலைவராக செயல்படும் குளித்தலை காவல்நிலைய ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.



கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த பரளி என்கின்ற கிராமத்திற்கும், கருங்கலாப்பள்ளி கிராமத்திற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்த நிலையில், பரளி கிராமத்தினை சார்ந்த இரு (தேவேந்திரகுல வேளாளர்) இளைஞர்களை, கருங்கலாப்பள்ளி (முத்துராஜா) இளைஞர்கள் இருவர் கடுமையாக பலத்த ஆயுதங்கள் கொண்டும், பீர்பாட்டிலினாலும் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் ஒரு சமூகத்தினருக்கு (முத்துராஜா) மட்டும் ஆதரவாக செயல்பட்டதோடு, பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கும் பொய்யாக பதிந்துள்ளார். இதனையடுத்து இந்த பிரச்சினை., மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவனத்தலைவர் பொன்.முருகேசனுக்கு செல்லையில், அவரது தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் அந்த பரளி ஊர்  பொதுமக்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர்,  மனு அளித்தனர். மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போதே, ஒரு சமூகத்தினருக்கு மட்டும் சாதி சங்கத்தலைவர் போல செயல்படும் காவல்துறை ஆய்வாளர் பாஸ்கர் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், எடுக்காத பட்சத்தில் பரளி கிராமத்தினை சார்ந்தவர்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் எச்சரித்தனர்.

மேலும், இதே மனுவினை வலியுறுத்தியும், குளித்தலை காவல்நிலைய ஆய்வாளர் பாஸ்கரனை மாற்றக்கோரி கரூர் எஸ்.பி அலுவலகத்தினை பரளி கிராம மக்கள் சார்பில் முற்றுகையிடப்பட்டது. பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுக்களையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் மறுமலர்ச்சி கழக கரூர் மாவட்ட செயலாளர் கட்டளை மு.க.விஜி யும் உடனிருந்தார்.
சி.ஆனந்தகுமார்