திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (14:01 IST)

மோடி வைத்த சஸ்பென்ஸ் ரிவீல்ட்! ஒட்டு மொத்த நாட்டுக்கே பெருமை!!!

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்ளிடையே உரையாட இருக்கிறேன். முக்கிய விஷயத்தை உங்களிடம் பகிர காத்திருக்கிறேன் என பதிவிட்டிருந்தார். அந்த சஸ்பென்ஸ் இப்போது வெளியாகியுள்ளது. 
 
விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா சிறப்பாக இந்தியா செய்து முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி விரிவாக கூறியதாவது,  
 
விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதன்மூலம் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனையான மிஷன் சக்தி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 
 
விண்வெளி மூலம் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடிகள் நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மூன்று நாடுகள் மட்டுமே இருந்தன. தற்போது, இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. 
செயற்கைக்கோளை வைத்து இந்தியாவை கண்காணிக்கும் பிற நாடுகளின் முயற்சி அல்லது ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளை தடுக்க ‘மிஷன் சக்தி’ என்ற தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கி வந்தது. இதன் சோதனை இப்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வெற்றி நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு மைல்கல்லாக அமையும். இதன் மூலம் இந்தியா உலகின் விண்வெளி துறையில் சூப்பர் பவர் நாடு என்ற தகுதியை அடைந்துள்ளது என பெருமிதமாக தெரிவித்தார்.