1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Allocates Rs 50 Lakh to Set Up Modern AI Lab at MGR Film Institute

தமிழ்நாடு திரைப்பட கல்லூரியில் ஏஐ ஆய்வகம்.. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க திட்டம்...

தமிழ்நாடு அரசு
தமிழகத்தில் கலை மற்றும் தொழில்நுட்ப கல்வியை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்  அமைப்பதற்கான அரசாணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை வெளியிட்டுள்ளது.
 
2026-2027-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, மாணவர்களின் படைப்புத் திறன் மற்றும் திரைத் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நவீன உபகரணங்களை நிறுவுதல், இடவசதி ஏற்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்புத் தொழில்நுட்பப் பயிற்சிகள் ஆகியவை படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளன. அடுத்த 24 வாரங்களுக்குள் இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மாணவர்களின் பாடத்திட்டம் மற்றும் நடைமுறைப் பயிற்சிகளில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நவீன ஆய்வகத்தின் மூலம் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் நவீன காலத் திரைத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதுடன், எம்.ஜி.ஆர். திரைப்படப் பயிற்சி நிறுவனம் எதிர்காலத் திரைத் தொழில்நுட்பக் கல்விக்கான முன்னோடி மையமாக உருவெடுக்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
சூரிய, காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஆவின் திட்டம்.. இனி கரண்ட் பில்லே இருக்காது...