1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Aavin Floats Tenders for Five-Year Green Power Procurement and Facility Maintenance to Cut Costs

சூரிய, காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஆவின் திட்டம்.. இனி கரண்ட் பில்லே இருக்காது...

ஆவின்
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில், அரசு நிறுவனங்களை லாபகரமாகவும் நவீனமாகவும் மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனம், மின் கட்டண சுமையைக் குறைக்கவும் பால் தரத்தை பாதுகாக்கவும் இரண்டு முக்கிய டெண்டர்களை வெளியிட்டுள்ளது.
 
சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மெட்ரோ பால் பண்ணைகளுக்கு தடையில்லா மின்சாரம் மிகவும் அவசியம். வணிக ரீதியான அதிக மின் கட்டணத்தை தவிர்க்க, அடுத்த 5 ஆண்டுகளுக்கு சூரிய மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் பசுமை மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தி செலவு குறைவதோடு, பொதுமக்களுக்குப் பால் விலையை உயர்த்தாமல் வழங்கவும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய லாபம் அளிக்கவும் முடியும்.
 
அதேபோல, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகமான 'ஆவின் இல்லத்தில்' செயல்படும் பால் தரப் பரிசோதனை ஆய்வகம் மற்றும் கணினி சர்வர் அறைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, நவீன வி.ஆர்.எஃப்  ஏ.சி. அமைப்புகளை முழுமையாகப் பராமரிப்பதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாகப் பணிகளும், பால் விநியோகக் கணக்குகளும் எவ்விதத் தடையுமின்றி வேகமாக நடைபெறும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இனி வானில் இருந்து கண்காணிப்பு! ஆளில்லா விமான நிறுவனம் அமைக்க தமிழக அரசு திட்டம்...